திருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை
Send us your feedback to audioarticles@vaarta.com
தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக ரயிலில் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு இளம்பெண் தினமும் வேலூரிலிருந்து சென்னைக்கு திருடுவதற்காக வந்துள்ளார். திருடுவதை முழுநேர தொழிலாக கொண்டுள்ள இவர் தற்போது போலீசில் பிடிபட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஏழ்மை நிலையில் இருந்த ஜோலார்பேட்டை சேர்ந்த தேவி என்ற 24 வயது பெண், சென்னைக்கு சென்று வேலை தேட முடிவு செய்தார். அதனையடுத்து அவர் சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கும்போது தூங்கிக்கொண்டிருந்த ஒருவரின் கழுத்திலிருந்த நகையை திருடி உள்ளார். அந்த நகையை விற்று கை நிறைய பணத்தை பார்த்த தேவிக்கு வேலை தேட வேண்டும் என்ற நினைப்பே வரவில்லை. தொடர்ந்து திருட்டில் ஈடுபட அவர் முடிவு செய்துவிட்டார்
வேலூரில் இருந்து தினமும் வேலைக்கு செல்வதாக கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி விட்டு சென்னை செல்லும் ரயிலில் ஏறும் இவர் அன்றைய தினம் யாரிடம் திருட வேண்டும் என்று டார்கெட் செய்து சென்னைக்கு வரும் முன் திருடிவிடுவாராம். வேலூரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு முன் இரண்டு அல்லது மூன்று பேரிடம் செல்போன், நகைகள் அவற்றை விற்று வீடு சென்றுவிடுவார்.
இவ்வாறு திருடிய பணத்தில் ஜோலார்பேட்டையில் ஒரு பங்களா டைப் வீடு மற்றும் விதவிதமான சீரியல் நடிகைகள் அணியும் ஆடைகளையும் அவர் வாங்கியிருந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் அவர் திருட்டு தொழில் செய்வது அவரது நெருங்கிய உறவினர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தினமும் சென்னைக்கு வேலைக்கு செல்வதாகவும் கை நிறைய சம்பளம் வாங்கி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் அவருடைய உறவினர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்
இந்த நிலையில் தற்போது கையும் களவுமாக பிடிபட்ட தேவி சிறையிலடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 70 சவரன் தங்க நகைகளும் 77 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout