சென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

சென்னையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் ஒருவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் என்ற பகுதியில் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலர் தங்கியிருந்த நிலையில் இந்த விடுதியின் குளியலறைக்கு வெளியே ஒரு இளைஞன் நீண்ட நேரம் நின்று இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த ஒரு சிலர் அந்த நபரை விசாரித்தனர்

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியதை அடுத்து அவரை பெண்கள் விடுதியின் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்போதுதான் அவர் விடுதியின் சமையல் மாஸ்டர் என்பது தெரிய வந்தது. சமையல் மாஸ்டருக்கு குளியல் அறையின் அருகே என்ன வேலை என்று விசாரணை செய்தபோது விடுதி நிர்வாகத்தினர் கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை

இதனையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நபரை விசாரித்தபோது அந்த நபரின் பெயர் வெங்கடேஷ் பிரசாத் என்றும் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்தது உண்மைதான் என்றும் ஒப்புக் கொண்டார்

இதனையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். பெண்கள் தங்கும் விடுதியில், அங்கு வேலை பார்க்கும் ஒருவரே பெண்களின் குளியல் அறையில் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது