ஈவு இரக்கமின்றி கல்லால் அடித்து கொல்லப்பட்ட முதியவர்: சென்னையில் பயங்கரம்

  • IndiaGlitz, [Tuesday,April 14 2020]

சென்னையில் ஈவு இரக்கமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை 30 வயது வாலிபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாலை ஓரத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அருகில் அசாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்த இளைஞன் ஒருவரும் சாலையோரத்தில் தங்கி இருந்ததாக தெரிகிறது. அந்த இளைஞருக்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம் என்பதால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு நான்கைந்து நாய்கள் படுத்து இருக்குமாம்.

இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் நாயின் மீது கல்லால் எறிந்ததாக தெரிகிறது. இதில் ஒரு நாய் கல்லடி பட்டு வலியால் துடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை அதே கல்லால் அடித்துக் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனை அடுத்து அந்த பகுதிக்கு ரோந்து வந்த காவல்துறையினர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த முதியவரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் 30 வயது இளைஞர் ஒருவர் முதியவரை கல்லால் அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்ட போது அந்த இளைஞர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிபில் இஸ்லாம் என்பது தெரியவந்தது.

முதலில் விசாரணையின்போது ஊமை போல் நடித்த ரபிபில் அதன் பின் போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற சிம்பு: மகத் வெளியிட்ட வீடியோ வைரல்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக

கொரோனா விஷயத்தில் சமூக ஊடகங்கள் என்ன செய்கிறது???

கொரோனா பரவலை அடுத்து சமூக ஊடகங்களில் நம்பகத்தன்மையில்லாத பல வதந்திகள் பரவத் தொடங்கின.

பிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் வீசிய மர்ம பெண்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர்: தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளையும் தாக்கி வருகிறது.

இந்தியாவுக்கு சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது தாய்நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.