சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு சென்னை காவல்துறை தரப்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு முறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை காவல்துறையின் அறிக்கையின்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் 84 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருவதாகவும் சென்னை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்தஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 120 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை காவல்துறையினர்களின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டினால் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த ஆண்டு புத்தாண்டு தினமாவது உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout