சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு சென்னை காவல்துறை தரப்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு முறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை காவல்துறையின் அறிக்கையின்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில்  84 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருவதாகவும் சென்னை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடந்தஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 120 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை காவல்துறையினர்களின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டினால் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த ஆண்டு புத்தாண்டு தினமாவது உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த் உரையின் முழுத் தொகுப்பு

இன்று ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கி வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும்...

2017-ன் மிகப் பெரிய செய்தி! ரஜினியின் அரசியல் அறிவிப்பு!

பல ஆண்டுகளாக பல லட்சக் கணக்கானோர் காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் நாயகி அறிவிப்பு

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

ஜனவரி 1, பல குடும்பங்கள் மறக்க நினைக்கும் நாள்: சுசீந்திரன்

2017ஆம் ஆண்டு முடிவடைந்து இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புதிய ஆண்டான 2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகில் உள்ள அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முந்திய கமல்ஹாசனின் அறிவிப்பு

ரஜினிகாந்த் இன்னும் சற்றும் நேரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார். ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது