பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை!!!
- IndiaGlitz, [Friday,December 04 2020]
சென்னை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பொன்னேரி அடுத்த உத்தகண்டிகை எனும் கிராமத்தில் வசித்து வந்த முனிநாதன் என்பவரின் வீட்டில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. பூட்டி இருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் சிலர் இப்படி கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர். 200 சவரன் தங்க நகை மட்டுமல்லாது 2.5 கி.லோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் போன்றவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தற்போது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மர்மக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.