சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன?
- IndiaGlitz, [Wednesday,April 05 2023]
சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் அர்ச்சகர்கள் ஐந்து பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள நங்கநல்லூர் என்ற பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் நடைபெறும். இந்த நிலையில் இன்று இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது சுவாமி சிலையும் சில அர்ச்சனை பொருட்களும் நீரில் மூழ்கி எடுக்க குளத்தில் அர்ச்சகர்கள் 25 பேர் இறங்கியதாகவும் அப்போது இரண்டு முறை சுவாமி சிலையும் அர்ச்சனை பொருட்களும் மூழ்க வைத்து அவர்கள் எடுத்ததாகவும் தெரிகிறது.
மூன்றாவது முறை மூழ்கும்போது அர்ச்சகர் ஒருவரின் கால் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற அர்ச்சகர்கள் பதறியபடி அவரை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் சேற்றில் சிக்கிய அர்ச்சகர் உள்பட ஐந்து பேர் தத்தளித்து கொண்டே நேரில் மூழ்கினர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் படகு மூலம் தேடியதில் ஐந்து அர்ச்சகர்களின் உடல் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.