நிலாவுல தண்ணி இருந்தா எங்களுக்கு கொடுங்க: இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ நேற்று அனுப்பிய சந்திராயன் 2, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளித்துறையின் மைல்கல் முயற்சியான இந்த சாதனைக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எப்போதுமே சீரியஸான டுவீட்டுக்களை மட்டும் பதிவு செய்யும் சென்னை குடிநீர் வாரியம் இதுகுறித்து தனது டுவிட்டரில், 'நிலவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்கு கொடுங்கள்' என்று ஒரு நகைச்சுவை டுவீட்டை பதிவு செய்துள்ளது

இந்த டுவீட்டை கலாய்த்த நெட்டிசன் ஒருவர் 'நிலவில் சாக்கடை தண்ணீர் இருந்தால் என்ன செய்வீர்கள்' என்று கேள்வி எழுப்ப அதற்கும் சளைக்காத குடிநீர் வாரியம், 'அந்த தண்ணீரை சுத்திகரிக்க எங்களிடம் தொழில்நுட்பம் இருக்கிறது. அதனை சுத்திகரித்து உங்களுக்கே குடிநீராக கொடுப்போம்' என நெத்தியடி பதில் ஒன்றை அளித்துள்ளது

அரசு அதிகாரிகள் என்றாலே எப்போது சீரியஸாகவே இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு என்பதையே இந்த டுவீட் காட்டுவதாக பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.