அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே சென்னை மெட்ரோவில் அனுமதி: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் காலை 8 மணிவரை அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் அதாவது அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதி. அதன்பின் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழக்கம்போல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மெட்ரோ ரயில் இயங்காது.

அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலகத்தில் இருந்து திரும்பி வீட்டுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களையும் அதிக கூட்டத்தையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது