இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை: சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பைகளில் ஒன்று சென்னை மெட்ரோ ரயில் என்று கூறினால் அது மிகையாகாது. குறைவான கட்டணத்தில் எந்த விதமான போக்குவரத்து பிரச்சினையுமின்றி வசதியாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நடுத்தர மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்
இந்த மெட்ரோ ரயிலில் அவ்வப்போது பல வசதிகள் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது. குறிப்பாக அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் பத்து ரூபாய்க்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் அருகில் உள்ள இடங்களில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் கேப் வசதி உள்ளது. இது பல பயணிகளுக்கு உபயோகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் மெட்ரோ ரயிலில் பயணிகளை ஈர்க்க அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பாக சென்னை மெட்ரோ ரயில்களில் இனி சைக்கிள்களை எடுத்துச் சொல்லலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் சைக்கிளை ஏற்று கொண்டு செல்லும் பயணிகள் தாங்கள் தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு தாங்கள் கொண்டு வந்த சைக்கிள்களிலேயே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த வசதியை சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்கு மெட்ரோ ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments