சென்னை மெட்ரோ ரயிலில் இலவச சைக்கிள் சேவை
- IndiaGlitz, [Friday,January 27 2017]
சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ சேவை சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. சென்னை நகரின் கடுமையான போக்குவரத்து டிராபிக்கில் இருந்து தப்பிக்க பலர் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் மிக வேகமாக பயணம் செய்துவிட்டாலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வதற்கு மீண்டும் ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோவை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இலவச சைக்கிள் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
முதல்கட்டமாக ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 10 சைக்கிள்களுடன் கூடிய இந்த சேவை அறிமுகமாகியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் ரூ.3000 டெபாசிட் கட்டி சைக்கிளை வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வதற்கோ செல்ல காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். சைக்கிளை பயன்படுத்துவதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஒருவேளை சைக்கிள் சேவை தேவையில்லை என்றால் முழுதொகையையும் திரும்ப பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பொறுத்து மற்ற மெட்ரோ நிலையங்களிலும் நீட்டிக்கப்படும் என்றும் இந்த திட்டம் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் சிறந்தவையாக இருக்கும் என்றும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,