ஐந்து மாதங்களுக்குப் பின் ஓடத் தொடங்கிய மெட்ரோ ரயில்: இயல்பு நிலைக்குத் திரும்பியது சென்னை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதல் மாநிலம் முழுவதும் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன
மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்களும் இன்று காலை முதல் இயக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சென்னை மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. அமைச்சர் எம்சி சம்பத் அவர்கள் இந்த ரயிலில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து முதல் ரயிலை தொடங்கி வைத்ததோடு அதில் பயணம் செய்தார்
இன்று முதல் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியதை அடுத்து பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நுழைவு வாயில்களில் முக கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் கிருமி நாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனையும் செய்யப்படும் என்பதும் அதிக உடல் வெப்பநிலை இருக்கும் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகள் ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இன்று காலை சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. மேலும் டிக்கெட் கவுண்டருக்கு செல்லும் பயணிகளுக்கு நேரடித் தொடர்புகளை தவிர்க்கும் வகையில் பணமில்லா பரிவர்த்தனை, தொடுதல் இல்லா பயணச்சீட்டுகளை வாங்க ஊக்குவிக்கப்பட்டனர். ஸ்மார்ட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறுவது, ரீசார்ஜ் செய்வது, யூஆர் குறியீடு மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே சுத்தம் செய்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தானியங்கி கதவுகள் அருகில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக முதல் முறையாக சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தானியங்கி கதவுகளில் பயண அட்டையை பரிசோதிக்கும் கருவியான கார்டு ரீடர் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே சென்னையில் தான் முதன்முதலில் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் டிக்கெட் கவுண்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்திற்கு பயணிகள் செல்ல வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று முதல் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com