சென்னை மெட்ரோவில் பணியாற்றும் திருநங்கைகள்… புது திருப்பத்தை ஏற்படுத்தும் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

ஒரு காலத்தில் திருநங்கைகளைப் பார்த்தாலே வெறுப்பை கொட்டும் தமிழ்ச் சமூகம் இன்றைக்கு நவீனக் கருத்துக்களாலும் சினிமாவின் தாக்கத்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டு இருக்கிறது. இதனால் சினிமாவில் கூட மதிப்புத் தரும் ஒரு சில நல்ல கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற நல்ல தாக்கங்களினால் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மதுரையில் ஒரு திருநங்கை மருத்துவராக பணிபுரிய மருத்துவமனை அமைத்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி சமூகம் கொடுக்கும் மதிப்பினால் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் திருநங்கைகளுக்கு புதிய பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று அவர்களின் வாழ்ப்பும் மதிப்பு மிக்கதாக மாறிவிடும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.

அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் அனுபவம், இதனால் சமூகத்தில் கிடைத்து இருக்கும் மதிப்பு, பொருளாதார முன்னேற்றம், தங்களைபோல இருக்கும் கோடிக் கணக்கான திருநங்கைகளுக்கு இவர்கள் கூறும் நம்பிக்கை வார்த்தை என இவர்களைப் பற்றிய பல்வேறு பதிவுகளை புது கோணத்தில் இந்த வீடியோ பதிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் புது திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் 13 திருநங்கைகளைப் பற்றிய இந்த வீடியோ பெரிரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

More News

என்னன்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்? எருமைச்சாணி ஹரிஜாவின் வைரல் புகைப்படம்!

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ஹரிஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து 'என்னவென்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்' என்று கூறியிருப்பது

கூடங்குளம், சிஏஏ, கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழக முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே கொடுத்துவிட்டேன்: விஜய்சேதுபதியின் தன்னடக்கம்!

சினிமாவை பொறுத்தவரை திரையில் தோன்றும் கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களை தான் பொது மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் அந்த சினிமாவை உருவாக்க பின்னணியில் நூற்றுக்கணக்கானோர்

விவசாயிகளின் நலனுக்காக 10 இடங்களில் பிரம்மாண்ட சந்தை- முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும்