சென்னை மெட்ரோவில் பணியாற்றும் திருநங்கைகள்… புது திருப்பத்தை ஏற்படுத்தும் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு காலத்தில் திருநங்கைகளைப் பார்த்தாலே வெறுப்பை கொட்டும் தமிழ்ச் சமூகம் இன்றைக்கு நவீனக் கருத்துக்களாலும் சினிமாவின் தாக்கத்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டு இருக்கிறது. இதனால் சினிமாவில் கூட மதிப்புத் தரும் ஒரு சில நல்ல கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற நல்ல தாக்கங்களினால் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மதுரையில் ஒரு திருநங்கை மருத்துவராக பணிபுரிய மருத்துவமனை அமைத்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி சமூகம் கொடுக்கும் மதிப்பினால் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் திருநங்கைகளுக்கு புதிய பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று அவர்களின் வாழ்ப்பும் மதிப்பு மிக்கதாக மாறிவிடும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.
அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் அனுபவம், இதனால் சமூகத்தில் கிடைத்து இருக்கும் மதிப்பு, பொருளாதார முன்னேற்றம், தங்களைபோல இருக்கும் கோடிக் கணக்கான திருநங்கைகளுக்கு இவர்கள் கூறும் நம்பிக்கை வார்த்தை என இவர்களைப் பற்றிய பல்வேறு பதிவுகளை புது கோணத்தில் இந்த வீடியோ பதிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் புது திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் 13 திருநங்கைகளைப் பற்றிய இந்த வீடியோ பெரிரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com