4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- IndiaGlitz, [Wednesday,October 28 2020]
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க இருப்பதன் காரணமாகவும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ’தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது
நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன,.