உருவானது நிவர் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக உருவாகியதால் இன்று நிவர் புயல் உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் நிவர் புயல் உருவாகிவிட்டதை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருவானது என்றும், இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீட்டரில் புயல் மையம் கொண்டுள்ளது என்றும், தென்மண்டல வானிலை இயக்குநர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் உருவான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூரில் கடந்த சில மணி நேரங்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புயல் பாதிக்கும் சென்னை உள்பட பல பகுதிகளில் மின்சாரம் விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் நாளை  மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை?

வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால்

நெருங்கி வரும் நிவர் புயல்; சென்னை உள்பட 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் மற்றும் காரைக்கால்

’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

விஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்