சென்னை விடுதி அறையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் நேற்று இரவு மரணம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவ மாணவிகளும் கொரோனா சிறப்புப் பிரிவில் நோய்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வகையில் வேலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கொரோனா சிறப்புப் பிரிவில் பணிபுரிந்தார். கொரோனா சிறப்பு பிரிவில் பணி புரிவோர் வீட்டுக்குச் செல்ல அனுமதி இல்லை என்பதால் அவர் மருத்துவ கல்லூரியின் மாணவியர் விடுதியிலேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் இன்று பணிக்கு செல்ல அவரது தோழி பிரதீபாவின் அறையை தட்டிய போது அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தோழி உடனடியாக காவலாளியின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பிரதீபா மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பிரதீபா தனது பெற்றோரிடம் செல்போனில் நேற்றிரவு பேசியதாகவும் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது. இருப்பினும் பிரதீபாவின் மரணம் மரமாக இருப்பதாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் மருத்துவக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதால் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

அஜித் பிறந்த நாளில் விஜய் ரசிகர்கள் செய்த சாதனை

இன்று மே 1, தொழிலாளர் தினத்தில் தல அஜித்தின் பிறந்த நாள் என்பதும் இன்றைய அஜித்தின் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு

ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது.