சென்னை மேயராகும் 28 வயது இளம்பெண்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக 21 மாநகராட்சிளையும் திமுக கைப்பற்றியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை மேயர் பதவிக்கு 28 வயது இளம்பெண் ப்ரியா என்பவர் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பெண் ஒருவர் சென்னை மேயராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் என்பவர் போட்டியிடுகிறார். மேலும் மதுரை, நெல்லை கோவை மேயர் வேட்பாளர்களின் பட்டியல் இதோ:
சென்னை
மேயர் - ஆர்.பிரியா
துணை மேயர் - மகேஷ் குமார்
மதுரை
மேயர் - இந்திராணி
திருச்சி
மேயர் - அன்பழகன்
துணை மேயர் - திவ்யா
திருநெல்வேலி
மேயர் - சரவணன
துணை மேயர் - ராஜூ
கோவை
மேயர் - கல்பனா
துணை மேயர் - வெற்றி செல்வன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments