மென்மொருள் மூலம் போலி ஏடிஎம் கார்டு. லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது
- IndiaGlitz, [Friday,July 07 2017]
இன்றைய டெக்னாலஜி உலகில், எந்த பொருளை வாங்கினாலும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் ஸ்வைப் செய்வது சர்வசாதாரணமாகி வருகிறது. இதை பயன்படுத்தி லட்சக்கணக்கில் ஏடிஎம் கொள்ளை அடித்த சென்னை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னையை சேர்ந்த அஜாஸ் என்ற வாலிபர் சில கடைகளில் லிங்க் வைத்து கொண்டு அந்த கடைகளில் உள்ள ஸ்வைப் மிஷின்களில் சாப்ட்வேர் ஒன்றை பொருத்தியுள்ளார். இந்த ஸ்வைப் மிஷினில் ஸ்வைப் செய்யப்படும் கார்டுகளின் பின் நம்பர் மற்றும் கார்டின் தகவல்கள் அந்த சாப்ட்வேரால் பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இந்த தகவல்கள் அடிப்படையில் போலி ஏடிஎம் கார்டு தயார் செய்து ஏடிஎம்-இல் பணத்தை எடுத்துள்ளார் அஜாஸ்.
புரசைவாக்கம், ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை, சேப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு 11.45 மணிக்கு மேல் இந்த நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். முந்தைய நாளில் எடுக்க அனுமதிக்கப்படும் பணம் மற்றும் மறுநாள் எடுக்க அனுமதிகப்படும் பணத்தை இரவு 11.45 மணியில் இருந்து 12.15 மணிக்குள் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சிசிடிவியில் இவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார் இவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அஜிஸ், இக்பால் என்பவருக்காக இந்த வேலையை செய்து தினமும் ரூ.5000 முதல் ரூ.10000 வரை சம்பளமாக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இக்பால் தமிழகத்தில் மட்டுமின்றி உத்தரபிரதேசம், பீகார், மற்றும் மகாராஷ்டிரா உள்பட பல இடங்களில் இதேபோல் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தற்போது இக்பாலை பிடிக்க வலைவீசியுள்ளனர்.