சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது முக்கிய பதவியில் உள்ளவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் பலியாகியும் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பால முரளி என்பவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பால முரளி அவர்களுக்கு கடந்த ஐந்தாம் தேதி அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதனயடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
கடந்த 13ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமானதாக மோசமானதை அடுத்து சென்னை காவல் நிலைய ஆணையர் ஏகே விசுவநாதன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சத்திற்கு மருந்து வாங்கி கொடுத்து உயரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தார். இந்த மருந்தால் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்று மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்து சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்
சென்னை வடபழனியில் வசித்து வந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வேலூரை சேர்ந்த பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொரோனாவால் மரணம் அடைந்தது காவல் துறையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com