ஹாட்ரிக் சாதனை… 2 முறை கின்னஸ் சாதனை புரிந்த 5 வயது சென்னை சிறுவன்!!!
- IndiaGlitz, [Friday,November 06 2020]
பொதுவாக சிறிய வயது குழந்தைகள் கார்ட்டூனை பார்த்து விட்டாலே போதும் செம குஷியா மாறிடுவாங்க.. ஆனால் ஒரு 5 வயது சிறுவன் எல்லா கார்ட்டூன் சித்திரங்களையும் அடையாளம் கண்டுபிடித்து அதன் பெயரை சரியாகவும் வேகமாகவும் உச்சரிப்பது என்றால் ரொம்பவே கஷ்டம்தான். அப்படி ஒரு சாதனையை சென்னையைச் சேர்ந்த ஒரு 5 வயது சிறுவன் ஸ்ரீஷ் நிகர்வ் செய்திருக்கிறான். இதனால் உலகச் சாதனைப் புத்தகத்தில் அவனுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது.
ஸ்ரீஷ் நிகர்விடம் ஒவ்வொன்றாக 50 கார்ட்டூன் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதை பார்த்த உடனே அதன் பெயரை மிகச்சரியாக உச்சரித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறான். மிக குறுகிய நேரத்தில் இதை செய்ததால் அவனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டதாக கின்னஸ் சாதனை குழு குறிப்பிட்டு இருக்கிறது. டெக்ஸ்டர்ஸ் லேபரேட்டரி, டெக்ஸ்டர் முதல் ஜெர்ரி வரை, டாம் அண்ட் ஜெர்ரி மற்றும் ஷான் தி ஷீப் வரை அனைத்துப் படங்களையும் சிரமமே இல்லாமல் சில நொடிகளில் 5 வயது சிறுவன் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும் இச்சாதனை வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. இப்படி ஸ்ரீஷ் நிகர்வ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பது இதுவே முதல் முறையும் அல்ல. இதற்கு முன் விதவிதமான வாகனங்களில் பெயர்களை குறுகிய நேரத்தில் கூறி உலகச் சாதனை படைத்து இருக்கிறான். 5 வயதுக்குள்ளே 2 முறை உலகச் சாதனை படைத்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.