சென்னை காசி தியேட்டரில் துணிவா? வாரிசா? செம வீடியோ ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த படம் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ’துணிவு’ மற்றும் ’வாரிசு’ ஆகிய படங்களின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையை பொருத்தவரை திரையுலக பிரபலங்கள் விரும்பி பார்க்கும் தியேட்டர் என்றால் அது காசி தியேட்டர் தான் என்பதும் அந்த தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் பல திரையுலக பிரபலங்களை பார்க்கலாம் என்பது தெரிந்ததே.
அதேபோல் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய தேர்வாக கருதப்படுகிறது காசி தியேட்டரில் ’துணிவு’, ’வாரிசு’ இரண்டு படங்களில் எந்த படம் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது காசி தியேட்டர் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ’துணிவு’ படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் ‘மங்காத்தா’ மற்றும் துணிவு படத்தின் காட்சிகள் உடன் இணைக்கப்பட்ட வீடியோவையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Brace yourself 😎🔥
— Kasi Theatre (@kasi_theatre) January 6, 2023
We are getting ready to welcome our dear #AjithKumar 🥰 in style !!
Grandeur #ThunivuAtKASI this Pongal 2023 ✨#Thunivu #ThunivuPongal pic.twitter.com/qWQVPjfQ5h
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments