சென்னை காசி தியேட்டரில் துணிவா? வாரிசா? செம வீடியோ ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த படம் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ’துணிவு’ மற்றும் ’வாரிசு’ ஆகிய படங்களின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை பொருத்தவரை திரையுலக பிரபலங்கள் விரும்பி பார்க்கும் தியேட்டர் என்றால் அது காசி தியேட்டர் தான் என்பதும் அந்த தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் பல திரையுலக பிரபலங்களை பார்க்கலாம் என்பது தெரிந்ததே.

அதேபோல் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய தேர்வாக கருதப்படுகிறது காசி தியேட்டரில் ’துணிவு’, ’வாரிசு’ இரண்டு படங்களில் எந்த படம் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது காசி தியேட்டர் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ’துணிவு’ படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் ‘மங்காத்தா’ மற்றும் துணிவு படத்தின் காட்சிகள் உடன் இணைக்கப்பட்ட வீடியோவையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய்சேதுபதி நடிக்கும் முதல் வெப்தொடர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே.

'தமிழ்நாடு வாழ்க': கமல்ஹாசனின் சாட்டையடி டுவிட்

சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் நேற்று மாலை முதல் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னை புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் புத்தகங்கள்.. வருங்கால இயக்குனர்களுக்கு வரப்பிரசாதம்!

சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களின் திரைக்கதை புத்தகங்கள் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிவி பிரகாஷின் அடுத்த படம்.. தனுஷ் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் தற்போது சில படங்களில் நடித்தும் சில படங்களில் இசையமைத்தும்

ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்.. 'ஜெயிலர்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.