சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,November 14 2017]
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மந்தவெளி, மைலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
ஆனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பொன்னேரி அரசு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த தேர்வுகள் வேறு நாளில் நடத்தப்படும்: கல்லூரி முதல்வர் கருப்பன் தெரிவித்துள்ளார்.