சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் உத்தரவு

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி நேற்று இரவு முதல் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல். கிண்டி, மேற்கு மாம்பலம், பாடி, நுங்கம்பாக்கம், எழும்பூர், ராயபுரம், கொடுங்கையூர், வடபழனி ஆகிய பகுதிகளிலும் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

இதனை கருத்தில் கொண்டு இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை சற்றுமுன்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.