கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் விவகாரம்.. நடிகை அபிராமி கருத்துக்கு சின்மயி பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை கலாஷேத்ரா கல்லூரி நடந்த மாணவிகளுக்கு நடந்த பாலியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் நான்கு பேர்கள் மீது சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ’எப்போதும் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு முடிவு எடுக்கக் கூடாது என்றும் 89 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் நானும் படித்திருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கலாஷேத்ரா என்ற பெயரை சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் கூட இது பற்றி பேசுவது வருத்தமாக இருக்கிறது என்று கூறிய அபிராமி, கலாஷேத்ரா புகழை கெடுக்கும் செயல் தான் இது என்றும் இந்த விஷயத்தில் கலாஷேத்ரா ரேவதி மேடத்திற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்த ஒரு குற்றச்சாட்டு ஆக இருந்தாலும் உடனடியாக அதை வெளியே தெரிவிக்க வேண்டும் என்றும் பல வருடங்கள் கழித்து நன்றாக வளர்ந்து விட்டு அதன்பின் குற்றம் சொல்லக்கூடாது என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து பாடகி சின்மயியை மறைமுகமாக குறிப்பிடுவதாக நெட்டிசன் தெரிவித்த நிலையில் சின்மயி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உண்மையை எப்போது சொன்னாலும் அது உண்மைதான், நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு உண்மை பொய்யாக விடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை போலவே பிரபல ஹாலிவுட் நடிகை லேடி காகாவுக்கு நடந்தது என்றும் அவர் பல ஆண்டுகள் கழித்து தான் அதை வெளியே சொல்லியிருந்தார் என்றும் கூறியுள்ளார்.
என்ன லாஜிக் இது.. இத்தன வருஷம் நடக்கலைன்னா இப்ப நடந்திருக்காதா.. அதென்னங்க மேடம்… ‘யார் யாரோ’ ‘ காலாக்ஷேத்ரா னு வாயில வராதவங்களாம்’ பேசறாங்கலாம்.. ஏன் வாயில வந்தா தான் பேசனுமா…??? So இவாளுக்கு நடந்த தப்பு பெருசு இல்ல.. so called ‘ யார் யாரோ’ பேசறது தான் பிரச்சனையாம்.. pic.twitter.com/9Kvb3PnEnx
— MooknayakDr (@sathisshzdoc) April 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments