புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்ததா? திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருசில 2000 ரூபாய் நோட்டை வாங்குவதற்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் சாதாரண பொதுமக்கள் கால்கடுக்க மணிக்கணிக்கில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஒருசில நாட்களுக்கு முன் அறிமுகமான இந்த நோட்டுக்கள் ஒரு தனிப்பட்ட நபர், அதாவது சேகர் ரெட்டியிடம் எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில் புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து நேரடியாக சேகர் ரெட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது
வழக்கமாக அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னரே அந்த பணம் ஒவ்வொரு வங்கிக்கும் பிரித்து கொடுக்கப்படும். ஆனால் ரூபாய் நோட்டுக்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு அச்சகத்தில் இருந்து நேரடியாக ஒருசில வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது
இவ்வாறு நேரடியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி சிறப்பு பண நிர்வாக கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த கிளைகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை சேகர் ரெட்டி தனது செல்வாக்கை பயன்படுத்தி அப்படியே தனது வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும், இதன் காரணமாகவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout