சென்னை எங்க கோட்டை...! உறுதி கூறும் திமுக...! காரணம் என்ன..?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் காரணமாக, சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக-வினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதிமுக-வின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், முக்கியமாக மநீம மற்றும் அமமுக போன்ற கட்சிகளின் வருகையால், இரட்டை இலையில் ஓட்டுக்கள் பிரியும். அதில் திமுக-வின் வாக்குகள் பிரியாது. சென்ற 2011-இல் திமுகவிற்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலையைதான் அதிமுக இந்த ஆண்டில் சந்திக்க இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது மட்டுமில்லாமல், தங்களுக்கென தனி வியூகம் மற்றும் கூட்டணியை அமைத்திருப்பதாக திமுக சார்பில் உறுதியாக கூறப்படுகிறது.
சென்னையில் திமுக-விற்கு ஒட்டுகள் எப்படி..?
பொதுவாகவே சென்னை என்பது திமுக-வின் கோட்டை என சொல்லலாம். 1991 மற்றும் 2011 ஆண்டுகளில் மட்டுமே திமுக மிக மோசமான சூழலில் தோல்வி அடைந்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டில் சென்னை புறநகர் பகுதியான கொளத்தூரில் ஸ்டாலின் அவர்களும், சேப்பாக்கம் தொகுதியில் ஜெ. அன்பழகனும் வெற்றி பெற்றிருந்தனர். பிற தொகுதிகளை பார்த்தால் அதிமுக கூட்டணி காட்சிகளே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் வரலாறுகளை பார்த்தால் திமுக-வே பெரும்பான்மையான தொகுதிகளில் வாகை சூடி இருந்தது.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில்,சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகள், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளிலும்,அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி கண்டது.
2019 இடைத்தேர்தலின் போது, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளால் கணிச அளவில் வாக்குகள் பிரிந்ததும்,பாஜக மீதான எதிர்ப்பும் தான் திமுக வெற்றி பெற முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இம்முறையும் அதேபோல் நடக்க வாய்ப்புள்ளதால், சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என திமுக-வினர் மத்தியில் உறுதியாக பேசப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதால், பிற தொகுதிகளில் திமுக-வே நிற்கிறது. பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக-வே நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments