சென்னை எங்க கோட்டை...! உறுதி கூறும் திமுக...! காரணம் என்ன..?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் காரணமாக, சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக-வினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதிமுக-வின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், முக்கியமாக மநீம மற்றும் அமமுக போன்ற கட்சிகளின் வருகையால், இரட்டை இலையில் ஓட்டுக்கள் பிரியும். அதில் திமுக-வின் வாக்குகள் பிரியாது. சென்ற 2011-இல் திமுகவிற்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலையைதான் அதிமுக இந்த ஆண்டில் சந்திக்க இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது மட்டுமில்லாமல், தங்களுக்கென தனி வியூகம் மற்றும் கூட்டணியை அமைத்திருப்பதாக திமுக சார்பில் உறுதியாக கூறப்படுகிறது.

சென்னையில் திமுக-விற்கு ஒட்டுகள் எப்படி..?

பொதுவாகவே சென்னை என்பது திமுக-வின் கோட்டை என சொல்லலாம். 1991 மற்றும் 2011 ஆண்டுகளில் மட்டுமே திமுக மிக மோசமான சூழலில் தோல்வி அடைந்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டில் சென்னை புறநகர் பகுதியான கொளத்தூரில் ஸ்டாலின் அவர்களும், சேப்பாக்கம் தொகுதியில் ஜெ. அன்பழகனும் வெற்றி பெற்றிருந்தனர். பிற தொகுதிகளை பார்த்தால் அதிமுக கூட்டணி காட்சிகளே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் வரலாறுகளை பார்த்தால் திமுக-வே பெரும்பான்மையான தொகுதிகளில் வாகை சூடி இருந்தது.

சென்ற நாடாளுமன்ற தேர்தலில்,சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகள், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளிலும்,அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி கண்டது.

2019 இடைத்தேர்தலின் போது, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளால் கணிச அளவில் வாக்குகள் பிரிந்ததும்,பாஜக மீதான எதிர்ப்பும் தான் திமுக வெற்றி பெற முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இம்முறையும் அதேபோல் நடக்க வாய்ப்புள்ளதால், சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என திமுக-வினர் மத்தியில் உறுதியாக பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதால், பிற தொகுதிகளில் திமுக-வே நிற்கிறது. பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக-வே நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

More News

தஞ்சையில் மேலும் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சர்வே ரிப்போர்ட்டில் வெற்றி வாகை சூடிய அதிமுக… பரபரப்பு தகவல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பு

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கமல்-ரஜினி பட நாயகி!

கமலஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', 'காதல் பரிசு' உட்பட பல படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' 'மாவீரன்' உள்பட பல படங்களிலும், நடித்தவர் நடிகை அம்பிகா.

மீண்டும் தொடங்கியது 'அண்ணாத்த' படப்பிடிப்பு: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.