சென்னை ஐபிஎல் போட்டிகள் திடீர் மாற்றம்: வெற்றியா? தோல்வியா?

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் சென்னையே போராட்டக்களமாகியிருந்தது. காவிரி போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டிகள் இருப்பதாகவும், எனவே சென்னை போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஒருசில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் தடியடி, காவல்துறையினர் மீது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களும் நடந்தது.

மேலும் வீரர்களை ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு அழைத்து செல்வதில் காலதாமதம் ஆகியவை உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஐபிஎல் நிர்வாகம் சார்பிலும் இருந்தது. இந்த நிலையில் வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் ஆகியவைகளை கணக்கில் கொண்டு சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த இனிவரும் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் ஏப்ரல் 20, 28, 30 மற்றும் மே5, 13, 20 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் நடைபெறும் மாற்று இடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  இடமாற்றம் போராட்டக்காரர்களின் வெற்றியாகவும், ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.

More News

காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை

ஸ்டைலா கெத்தா திரும்பி வந்த சிஎஸ்கே!

மஞ்சர் படை வீரர்கள் சேப்பாக்கத்தில் அணிவகுத்து 1000 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜடேஜா குறித்து அன்றே சொன்னார் தோனி

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றது.