நடிகைகளுடன் சென்னை தொழிலதிபர்: ஆபாச படத்தை காட்டி ரூ.50 லட்சம் பறித்த நண்பர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகளுடன் ஆபாசமாக இருந்ததாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி சென்னை தொழிலதிபர் ஒருவரிடம் ரூபாய் 50 லட்சத்தை மிரட்டி பெற்றதாக அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜா என்பவர் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு சென்னை திருச்சி உள்பட பல இடங்களில் ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பைனான்சியர்கள் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் ராஜாவிடம் பழகினர். தங்களுக்கு பைனான்ஸ் மூலம் வரும் வருமானத்தில் ஜாலியான வாழ்க்கை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தி நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் தொழிலதிபர் ராஜாவை வரவழைத்தனர். அந்த பார்ட்டியில் பிரபல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த பார்ட்டியில் ராஜா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் அவர் சுயநினைவு இழந்த நிலையில் அங்கு தங்கியிருந்த துணை நடிகைகளை வரவழைத்து போதையுடன் இருந்த ராஜாவுடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கார்த்திக் மற்றும் ரமேஷ் எடுத்ததாக தெரிகிறது.
அதன் பின்னர் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராஜாவிடம் காண்பித்து தங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்றும் பணம் தரவில்லை என்றால் குடும்பத்தினரிடம் இதை காட்டுவோம் என்றும் இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் ராஜா 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் அதன்பின்னரும் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவருக்கு கொடுத்த ரூபாய் 50 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்களது மொபைல் போனில் உள்ள ஆபாச படத்தையும் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments