சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: பிடிபட்ட வடமாநில வாலிபர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அடையாறு வங்கி ஒன்றில் பட்டப்பகலில் வடமாநில வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று திங்கட்கிழமை என்பதால் பிசியாக இருந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் பணம் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வரிசையில் நின்றிருந்தனர்
இந்த நிலையில் திடீரென வங்கியில் நுழைந்த வடமாநில வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்து வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டினார். அப்போது வங்கியில் டெபாசிட் செய்ய வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை பறித்து கொண்டு அந்த மர்ம வாலிபர் ஓடினார்
அந்த வாலிபரை பிடிக்க வங்கி காவலர்களும், வங்கி ஊழியர்களும் முயற்சித்தனர். ஆனால் தப்பி வெளியே ஓடிய அந்த வாலிபர், அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சிக்கினார். பின்னர் அந்த கொள்ளையன் அடையாறு காவல்நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான். பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவன் என்று அவன் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout