சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் மர்ம மரணம்: எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருப்பதாகவும் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் நேற்று மேலும் ஒரு மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த தகவல் அறிந்ததும் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்றும் எலக்ட்ரிக்கல் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

சென்னையில் முதல்முறையாக சதமடித்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் பெட்ரோல் விலை முதல் முறையாக சதம் அடித்தது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

எனக்கு 50...உனக்கு 25......! காதல் வித்தையால் அத்தையை மடக்கிய அத்தான்...!

மருமகனை திருமணம் செய்துகொண்ட, 50 வயது பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆபாசமாக பேசியது தப்பா..ஜாமீன் கேட்ட பப்ஜி மதன்...! போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு....!

சிறையில் உள்ள குற்றவாளி மதனின் ஜாமீன் மனுவிற்கு, காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது.

'தப்பு பண்ணிட்டேன்': மீண்டும் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா - சிம்பு 

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு இணையும் ஆல்பத்திற்கு 'தப்பு பண்ணிட்டேன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு மீண்டும் வரிவிலக்கா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வராக கருணாநிதி அவர்கள் இருந்த போது தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் உத்தரவை பிறப்பித்தார்