26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (அல்லது) கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அதிக வெட்பம் மிகுந்த நாட்கள், இந்த வருடம் மே 4ம் தேதி முதல் துவங்க உள்ளது.
வானியல் ஆய்வு படி, சூரியனுக்கு அருகில் மேஷம் என்னும் நட்சத்திரம் மைய பகுதிக்கு வருவதையே வெப்பம் மிகுந்த காலம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காலங்களில் அதிகம்பட்ச வெயில் சுட்டெரிக்கும்.
மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம், 26 நாட்கள் வரை, சுட்டெரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது, 29 ஆம் தேதி வரை இருக்கும்.
கத்திரி வெயிலின், தாக்கம் என்பது முதல் 7 நாட்களில் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து, பின் வெகுவாக குறைய தொடங்கும். குறிப்பாக அதிக பட்சமாக வெயில் இக்காலத்தில் சுட்டெரிக்கும் என்பதால், முதியோர்கள், குழந்தைகள் என பலரும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள கூடும்.
இதில் இருந்து தற்காத்து கொள்ள, அதிகப்படியான தண்ணீர், நீர் சத்து நிறைந்த பழங்கள், உணவில் மோர், தயிர், கூழ் உள்ளிட்ட உணவுகளை எடுத்து கொண்டு, இறைச்சி, புலி , காரம், எண்ணெய் உணவுகளை தவிர்த்து விட வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments