26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (அல்லது) கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அதிக வெட்பம் மிகுந்த நாட்கள், இந்த வருடம் மே 4ம் தேதி முதல் துவங்க உள்ளது.

வானியல் ஆய்வு படி, சூரியனுக்கு அருகில் மேஷம் என்னும் நட்சத்திரம் மைய பகுதிக்கு வருவதையே வெப்பம் மிகுந்த காலம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காலங்களில் அதிகம்பட்ச வெயில் சுட்டெரிக்கும்.

மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம், 26 நாட்கள் வரை, சுட்டெரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது, 29 ஆம் தேதி வரை இருக்கும்.

கத்திரி வெயிலின், தாக்கம் என்பது முதல் 7 நாட்களில் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து, பின் வெகுவாக குறைய தொடங்கும். குறிப்பாக அதிக பட்சமாக வெயில் இக்காலத்தில் சுட்டெரிக்கும் என்பதால், முதியோர்கள், குழந்தைகள் என பலரும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள கூடும்.

இதில் இருந்து தற்காத்து கொள்ள, அதிகப்படியான தண்ணீர், நீர் சத்து நிறைந்த பழங்கள், உணவில் மோர், தயிர், கூழ் உள்ளிட்ட உணவுகளை எடுத்து கொண்டு, இறைச்சி, புலி , காரம், எண்ணெய் உணவுகளை தவிர்த்து விட வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

More News

பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி.

தமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும் சுற்றுவட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 800 போட்டியில் தங்கம் வென்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை: தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றபோது வாக்காளர் பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பெயர் இல்லாததால்