விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!
- IndiaGlitz, [Wednesday,November 29 2023]
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் அவருடைய உடல்நிலை தேறி வருவதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் திடீரென விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது
இவ்வாறு மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.