'வலிமை' தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: என்ன காரணம்?

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’மெட்ரோ’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அந்த படத்தை பிறமொழிகளில் தயாரிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இந்த படத்தில் உள்ள கதை மற்றும் கதாபாத்திரங்களை ’வலிமை’ படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் இயக்குனர் வினோத் இணைத்து உள்ளதாகவும் இதனால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி ’வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கிய செயின் திருடர்களையும், திருடர்களின் கேங் மற்றும் அவர்களின் தலைவனை ஹீரோ தேடி கண்டுபிடிப்பதுதான் ‘மெட்ரோ’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.