'லியோ' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி உண்டா? நீதிபதியின் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் ’லியோ’ படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க படத்தயாரிப்பாளருக்கும், அந்த மனுவை பரிசீலிக்க அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே அதிகாலை 4 மணி காட்சி என்பது ’லியோ’ படத்திற்கு கிடையாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதித்தால் 7 மணி காட்சி திரையிடப்படும் என்றும் இல்லையென்றால் 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments