தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு சில மணி நேரங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதாகவும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே மொபைல் போன், டிவி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து இந்த ஆன்லைன் வகுப்புகளை பார்த்து பாடங்களை படித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், எனவே ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்

கடந்த 2ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62

அசோக்செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்க காத்திருக்கின்றனர். ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் அவர்கள் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிடுவார்கள்

கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும்: ஆன்லைன் வகுப்பு குறித்து பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்