லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்: நீதிமன்றத்தின் அதிரடி குறித்து பிரபல நடிகர் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லைகா நிறுவனம் நடிகர் விஷால் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளித்த நிலையில் நடிகர் விஷால் மீது பொய் வழக்கு தொடுத்ததற்காக ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷால் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் ‘சக்ரா’ திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Always believed that Justice will Prevail & Truth will Triumph,
— Vishal (@VishalKOfficial) August 18, 2021
The False Case against me & #Chakra Movie filed by LYCA has been dismissed by the Hon High Court of Madras today & hav ordered them to pay a penalty of Rs 5 lacs for foisting a false case & harassing me
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments