close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி: விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதியின் படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’இடம் பொருள் ஏவல்’. இந்த படம் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பதும் மேலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் ’இடம் பொருள் ஏவல்’ படத்தை வெளியிட அனுமதி அளித்துவிட்டதை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயக்குனர் லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதையில் ’இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறோம்.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களும், விஷ்ணு விஷால் அவர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மற்றும் வடிவுக்கரசி அவர்களும் நடித்துள்ளனர்.

வைரமுத்து அவர்களின் பாடல்களுக்கு முதல்முறையாக யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘இடம் பொருள் ஏவல்’ என்ற இந்த திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment