தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 08 2020]
தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும், எந்தவித சமூக விலகலையும் பின்பற்றாமல் சரக்கு வாங்க மதுப்பிரியர்கள் முண்டியடித்தது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்ய வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் மன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் மட்டும் வகைகளை விற்பனை செய்யலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்த நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மதுவாங்கிய மது பிரியர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாக இந்த உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.