மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • IndiaGlitz, [Friday,March 13 2020]

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் கூட பாதிக்கப்படுவதாகவும், சிலசமயம் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்களுடைய லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட தொகை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்கள் குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடலாமே என்றும், மதுக்கடைகள் இருப்பதால் தானே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர், மதுக்கடைகளே இல்லை என்றால் அவர்கள் எவ்வாறு குடிப்பார்கள்? இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

More News

உஷார் மக்களே..! ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கை மூடியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசானது தனது அரசு கணக்கினை ஆக்சிஸ் வங்கியிலிருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றியுள்ளது.

மக்கள் மனதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்: ரஜினிக்கு அட்வைஸ் செய்த நக்மா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியல் அட்வைஸ் செய்யாதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்ற வகையில் ஒரு மீம்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது தெரிந்ததே.

ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!

டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.                              

ரஜினியை கலாய்த்த ரோபோ சங்கர் படக்குழுவினர்?

ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த சில தகவல்களை வெளிப்படையாக கூறினார். அவரது சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு

ரஜினியை ஒரு அற்புத மனிதராக பார்க்கின்றேன்: பாரதிராஜா அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசிய அரை மணி நேர பேச்சில் முதல்வர் பதவிக்கு தகுதியான