'மாவீரன்' படத்தை தடை செய்ய அரசியல் கட்சி தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

’மாவீரன்’ படத்தில் தங்கள் அரசியல் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஐஜேகே என்ற கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் ’நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தை வெளியிட தடை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 வினாடிகள் பொறுப்புத்துறப்பு போட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் ஐஜேகே கட்சியின் கொடியை பிரதிபலிக்காதவாறு காட்சிகளை மாற்றி அமைத்த பின்னர் ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுநாள் ’மாவீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.