'வலிமை' ஓடிடி ரிலீசுக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஓடிடியில் பார்க்க குடும்ப ஆடியன்ஸ் உள்பட அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'வலிமை’ படத்தின் கதை தங்களுடைய மெட்ரோ படத்தின் கதையை ஒட்டி இருப்பதாக வழக்கு பதிவு செய்தார். மேலும் 'வலிமை’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஓடிடியில் 'வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் காப்பிரைட் உரிமையின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் எனவே இந்த படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து திட்டமிட்டபடி 25ஆம் 'வலிமை’ தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com