'ருத்ரன்' ரிலீஸ் விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ’ருத்ரன்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் 12.25 கோடிக்கு பெற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது 4.5 கோடி ரூபாய் அதிகம் கேட்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் மீது ரெவன்சா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ’ருத்ரன்’ திரைப்படத்தை 21ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.



இந்த நிலையில் தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ’ருத்ரன்’ படத்தின் ஹிந்தி மற்றும் வடமொழி டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக்கூடாது என்று இந்த பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,. அதை தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக்கொண்டு டப்பிங் உரிமை குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்ததை எடுத்து நீதிமன்றம் தடையை நீக்கியது.

இதையடுத்து நாளை திரையரங்குகளில் ’ருத்ரன்’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

பாலுமகேந்திரா மாணவர் சிவபிரகாஷ் இயக்கும் பேரன்பும் பெருங்கோபமும் : தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்பு..

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக சிவபிரகாஷ் இயக்கும் “பேரன்பும் பெருங்கோபமும்” உருவாகி வருகிறது 

சிறை தண்டனை குறித்த தீர்ப்பு.. இயக்குனர் லிங்குசாமி விளக்கம்..!

காசோலை வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சாலையில் ஆபத்தான பள்ளம்.. சொந்த செலவில் சரி செய்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ..!

சாலையில் ஆபத்தான பள்ளம் இருந்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவஸ்தை அடைந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனது சொந்த செலவில் அந்த பள்ளத்தை சரி செய்ததாக

மஞ்சுவாரியரை விடாமல் துரத்திய இளம்பெண்.. காரை நிறுத்தியவுடன் என்ன செய்தார் தெரியுமா?

பிரபல நடிகை மஞ்சு வாரியாரின் காரை விடாமல் இளம்பெண் ஒருவர் துரத்திய நிலையில் மஞ்சு வாரியார் தனது காரை நிறுத்தி செய்த செயல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தின் சூப்பர் அப்டேட்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும்