இரும்புத்திரை' தடை வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் மத்திய அரசின் ஆதார் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகள் நீக்கும் வரை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும்  நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும், ஆதார் திட்டம் குறித்தும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி அவருடைய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் வரும் வெள்ளியன்று இந்த படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

ஒரு விஜய் ரசிகையின் நெகிழ்ச்சியான பதிவு

தளபதி விஜய் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இதுதான் அடல்ட் காமெடியா? கொந்தளித்த பிரபல நடிகை

கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி என்றாலும் இந்த படத்திற்கு திரையுலகினர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

முரட்டு குத்துக்கு எதிராக கொந்தளித்த இயக்குனர்

கடந்த வாரம் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோ, அதற்கு மேல் பல மடங்கு இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தனுஷ் நாயகியின் திருமணத்தில் திரண்ட பாலிவுட் படவுலகம்

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜண்ணா' திரைப்படத்தின் நாயகியும், முன்னணி பாலிவுட் நடிகையுமான சோனம்கபூர், தன்னுடைய காதலர் ஆனந்த் அஜூஜாவை இன்று திருமணம் செய்தார்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் கண்டனம்

கடந்த வாரம் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் இளைஞர்களின் அமோக ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வந்து கொண்டிருந்தாலும்