'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை!

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம். இந்த வழக்கில் விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும், அந்த பணத்தை திருப்பித்தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், அந்த பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விஷால், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு ரூ.4 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த ’சக்ரா’ படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா? எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாக

கதறி கதறி அழும் சுரேஷ்: என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும்

பொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'அண்ணாத்த' அஜித்தின் 'வலிமை' உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு

நீ வெளியில வாடா இப்ப: சுரேஷிடம் சனம் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரக்கர்கள், ராஜ வம்சம் டாஸ்க்கில் நேற்று சுவராசியம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் இன்று சுவராசியம் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது