திரையரங்குகளில் 100% அனுமதி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Monday,November 08 2021]
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பதும் முதல் கட்டமாக 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தப்பட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே திரையரங்குகளை மூடவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 1 முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி தொடரும் என்பது உறுதியாகி உள்ளது.