தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடை திறப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்து உள்ளதை அடுத்து மாநில அரசு டாஸ்மார்க் உள்ளிட்ட கடைகளை திறக்க முடிவு செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
சென்னை தவிர தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு உள்பட எந்தெந்த நேரங்களில் எந்தெந்த வயதினர் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்பட அனைத்தும் தயாராக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து மதுக்களை டோர் டெலிவரி செய்ய முடியுமா என்று தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கூறிய போது ’மதுக்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து டெலிவரி செய்ய முடியாது என்றும் ஆனால் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் நாளொன்றுக்கு 2 மதுபாட்டில்கள் வாங்கிக் கொள்ள அனுமதி என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout